சீனாவில் கடும் நிலநடுக்கம்!

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (17:08 IST)
சீனாவின் சிச்சுவான், கான்சு மாகாண எல்லைப்பகுதியில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்திய நேரப்படி மதியம் 3.19 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இது மையம் கொண்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 70,000 பே‌ர் உயிரிழந்தனர். இதையடுத்து அப்பகுதி வழியாக நடைபெற இருந்த ஒலிம்பிக் தீபத் தொடர் ஓட்டம் ஒத்திவைக்கப்பட்டு, இன்று நடத்தப்பட்ட நிலையில், அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை பீதியடைய வைத்துள்ளது.

அந்தமானில் 5.3 ரிக்டர்: இதற்கிடையில், அந்தமான்-நிக்கோபர் தீவுப்பகுதியில், இந்திய நேரப்படி இன்று மாலை 3.38 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடல்பகுதியில் 35 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்