சார்க் நாடுகளின் 15வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்பு சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று நேபாளப் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவைச் சந்தித்துப் பேசினார்.
இருதரப்பு உறவுகள் குறித்தும், நேபாளத்தில் தேர்தல் முடிவடைந்து குடியரசு ஆட்சி அமைந்துள்ள நிலையில் அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்தும் கொய்ராலா, பிரமரிடம் எடுத்துரைத்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா - நேபாளத்திற்கு இடையே தற்போது நிலவும் வலுவான நல்லுறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாகவும் தெரிய வந்துள்ளது.