இந்தியா, சீனாவின் வளர்ச்சி நன்மையளிக்கும்: புஷ்

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (15:12 IST)
இந்தியா, சீனாவின் வளர்ச்சி உலக நாடுகளுக்கு நன்மையளிக்கும் விதமாகவே உள்ளதாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இந்த இரு நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்ந்து நட்புறவை வளர்த்துக் கொள்ளும் என்றார்.

வாஷிங்டனில் அய‌ல்நாட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இதனைத் கூறிய புஷ், தெற்காசியப் பகுதியில் உள்ள தொழில்முனைவோர், வர்த்தகர்களுக்கு போதிய வாய்ப்புகளை இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி உலக நாடுகளுக்கு தேவையான மேம்படுத்தப்பட்ட சேவை, பொருட்களை அளிப்பதில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் முன்னிலை வகிப்பதாகவும் புஷ் கூறினார்.

பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கிய காரணமான அயல்நாட்டு நேரடி முதலீடுகளுக்கு, இந்தியா, சீனாவில் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் புஷ் அப்போது குறிப்பிட்டார்.

சீனா, தாய்லாந்து, வடகொரியா ஆகிய ஆசிய நாடுகளுக்கு அடுத்த வாரம் அதிபர் புஷ் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்