போரைத் துவக்கியவர்களே அமைதியை ஏற்படுத்த முடியும்: ஐ.நா.!

வியாழன், 31 ஜூலை 2008 (18:08 IST)
போரைத் துவக்கியவர்களால்தான் அமைதியை நிலைநிறுத்த முடியுமே த‌விர, ஐ.நா. அமைதிக் கண்காணிப்பாளர்களால் அ‌ல்ல என ஐ.நா.வின் ப‌ன்னா‌ட்டு அமைதி அமைப்பு தெரிவித்துள்ளது.

அமைதிக் கண்காணிப்பாளர்களால் போர் நடைபெறும் இடங்களில் அமைதியை ஏ‌ற்படு‌த்து‌ம் முயற்சிகளை மே‌ற்கொ‌ள்ள மட்டுமே முடியும், நிரந்தர அமைதியை உறு‌தி செ‌ய்வது போரைத் துவக்கியவர்க‌ளி‌ன் கைக‌ளி‌ல்தான் உள்ளது எ‌ன்று ப‌‌ன்னா‌ட்டு அமை‌தி அமைப்பின் துணை பொதுச் செயலர் ஜீன்-மேரி கொஹினோ கூறினார்.

அமை‌தி முயற்சி என்பது அரசியல் செயல்பாடு என்பதை அழுத்தமாக குறிப்பிட்டுள்ள அவர், சம்பந்தப்பட்ட நாடுக‌ளி‌ன் முழு ஒத்துழைப்பும், ஐ.நா பாதுகாப்பு கூட்டமைப்பின் தலையீடும் இதற்கு தேவைப்படும் என்றார்.

ஜீன்-மேரி விரைவில் ஓய்வுபெற உள்ள ‌நிலை‌யி‌ல் அவரது பதவிக்கு, பிரான்சை சேர்ந்த அலெய்ன் லி-ராய் என்பவர் நியமிக்கபட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்