மெக்ஸிகோ கடல்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சூறாவளியாக மாறி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், மெக்ஸிகோ கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தின் தெற்கு கடலோரப்பகுதியை கடந்த போது சூறாவளியின் தாக்கம் பயங்கரமாக இருந்ததாகவும் (மணிக்கு 160 கி.மீ), இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூறாவளியின் தாக்கத்தால் டெக்சாஸ், மெக்ஸிகோவில் பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றும் மழை தொடரும் என்பதால் ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.