மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் பிணையில் விடுதலை!

வியாழன், 17 ஜூலை 2008 (13:11 IST)
மலேசிய காவல்துறையினரால் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்ட அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உடல்நலமின்மை காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்டவுடன் அன்வர் உடனடியாக வீட்டிற்கு சென்று விட்டதாக அவரது வழக்கறிஞர் சங்கரா நாயர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கீயாடிலன் கட்சியைச் சேர்ந்த (Keadilan) அன்வர் மீது ஓரினச் சேர்க்கை குற்றச்சாட்டு இருந்த நிலையில், அவர் நேற்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, கோலாலம்பூர் காவல்நிலைய தலையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்