குழாய் எரிவாயுத் திட்டம்: டெஹ்ரானில் மூன்று நாடுகள் கூட்டம்!
புதன், 16 ஜூலை 2008 (13:10 IST)
குழாய் மூலம் எரிவாயு கொண்டுவரும் திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக இந்திய ா, பாகிஸ்தான ், ஈரான் ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இம்மாதம் இறுதியில் நடைபெற உள்ளத ு. ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிவாயு எடுத்து வரப்பட உள்ள இந்த திட்டத்தில ், எரிவாயுவை எடுத்துச் செல்வதற்கு ஆகும் கட்டணம் தொடர்பான பேச்சு வார்த்தையில் இன்னமும் உடன்பாடு ஏற்படவில்ல ை. ஈரானுடன் இந்த ஒப்பந்தத்தை செய்துகொள்வதை அமெரிக்கா எதிர்த்து வருகிறத ு. பாகிஸ்தானில் இடைக்கால அரசு நடைபெற்று வந்ததால் இத்திட்டம் தொடர்பாக நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருந்தத ு. கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு அந்நாட்டில் பதவியேற்றுக்கொண்ட பின்னர் இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா பாகிஸ்தான் சென்று அந்நாட்டுடன் ஈரான்-பாகிஸ்தான ்- இந்தியா மற்றும் துர்க்மேனிஸ்தான ்- ஆப்கானிஸ்தான ்- பாகிஸ்தான்- இந்தியா ஆகிய குழாய் எரிவாயு திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர ். இந்த சந்திப்பைத் தொடர்ந்த ு, ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் எரிவாயுவை எடுத்து வர இந்தியா செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத் த, இத்திட்டம் தொடர்பான பாகிஸ்தானின் உயர்அதிகாரிகள் அடங்கிய குழு கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளத ு. இத்திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத் த பாகிஸ்தான் அரசுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளத ு. மேலும் இதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்ல ை. இந்த கூட்டத்துக்குப் பின் மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டம் தொடர்பான தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறத ு.
செயலியில் பார்க்க x