வீட்டு வேலை செய்துவந்த இரண்டு இந்தோனேஷிய பெண்களை கொடுமைப்படுத்தியதாக வர்ஷா சப்னானி-மஹேந்தர் சப்னானி என்ற இந்திய-அமெரிக்க தம்பதியினர் மீது தொடரப்பட்ட வழக்கில் வர்ஷா சப்னானிக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 25,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
கணவர் மஹேந்தர் சப்னானிக்கு அடுத்தபடியாக தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்த இந்திய தம்பதியினர் அமெரிக்காவில் வாசனைப் பொருட்கள் வர்த்தகம் செய்துவந்தனர். இவர்கள் மீது கடந்த டிசம்பர் மாதம் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாயின.
வீட்டு வேலைகளுக்காக சேர்க்கப்பட்ட இரண்டு இந்தோனேஷிய நாட்டு பெண்கள், தங்களை சப்னானி தம்பதியினர் அடித்து, உதைத்து சித்தரவதை செய்ததாக புகார் செய்தனர்.