ஐ.நா பாதுகாப்புத் தலைவர் பதவி விலகல்!

புதன், 25 ஜூன் 2008 (12:26 IST)
ஐ.நா பாதுகாப்புத் துறைத் தலைவர் சர் டேவிட் வெனெஸ் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த டிசம்பர் மாதம் அல்ஜியர்ஸில் உள்ள ஐ.நா. அலுவலகம் மீது அல் கய்தா நடத்திய கார்குண்டு தாக்குதலில் 17 ஐ.நா ஊழியர்கள் பலியானதையடுத்து, ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன் தனிப்பட்ட விசாரணைக்காக குழு ஒன்றை அமைத்திருந்தார்.

இந்த விசாரணையில் பாதுகாப்பு ஏற்பாடுகளின் குறைபாடுகள் காரணமாகவே அந்த தாக்குதல் நடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சர் டேவிட் வெனெஸ் தன் பதவியை துறந்தார்.

அந்த அல்ஜியர்ஸ் கார் குண்டு வெடிப்பிற்கு பிறகு உலகம் முழுதும் உள்ள ஐ.நா. அலுவலக வளாகங்கள் மற்றும் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து தனித்த குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் ஐ.நா. அலுவலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கு பொறுப்பேற்று தன் பதவியை வெனெஸ் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்