நேபாள மன்னர் இன்று அரண்மனையிலிருந்து வெளியேறுகிறார்!

புதன், 11 ஜூன் 2008 (11:25 IST)
நேபாள நாட்டின் கடைசி மன்னர் ஞானேந்திரா இன்று தன் அரண்மனையை காலி செய்கிறார். இதன் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வருகிறது.

தனது மணிமுடி மற்றும் பிற மதிப்பு மிக்க பொருட்களை அரசிடம் ஒப்படைத்து விட்டு காட்டு பங்களாவிற்கு குடி பெயர்கிறார்.

ஆட்சியை பிடித்துள்ள மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா மன்னர் வெளியேற 15 நாட்கள் கெடு விதித்திருந்தார். ஆனால் கெடு முடிவதற்கு முன்னரே மன்னர் வெளியேற முடிவு செய்துள்ளார்.

மன்னர் குடியேறும் புதிய பங்களா நேபாள் தலைநகருக்கு 7 கி.மீ தொலைவில் உள்ள நாகார்ஜுன் காட்டுப்பகுதியில் உள்ளது. இந்த பங்களாவை தற்காலிகமாக அரசு அவருக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்