‌‌திபெ‌த் ‌விவகார‌த்‌தி‌ல் யா‌ரு‌ம் தலை‌யிட வே‌ண்டா‌ம்: ‌சீனா!

செவ்வாய், 10 ஜூன் 2008 (18:33 IST)
திபெ‌த் ‌‌சி‌க்க‌ல் த‌ங்க‌ள் நா‌ட்டி‌ன் உ‌ள்‌விவகார‌ம் எ‌ன்பதா‌‌ல் அ‌தி‌ல் யாரு‌ம் தலை‌யிடுவதை‌த் தா‌ங்க‌ள் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை எ‌ன்று ‌சீனா கூ‌‌றியு‌ள்ளது.

திபெ‌த் ‌விவகார‌த்‌தி‌ல் தலா‌ய் லாமா‌வி‌ன் ‌பிர‌தி‌நி‌திகளுட‌ன் ‌தீ‌ர்வை நோ‌க்‌கிய பே‌ச்சு நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌சீனா‌வி‌ற்கு அமெ‌ரி‌க்காவு‌ம், ஐரோ‌‌ப்‌பிய ஒ‌‌ன்‌றியமு‌ம் அழு‌த்த‌ம் கொடு‌த்து‌ள்ளதாக வெ‌ளியான தகவ‌ல்க‌ள் ப‌ற்‌றி செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்கு, "‌நீ‌ங்க‌ள் கு‌றி‌ப்‌பிடு‌ம் தகவ‌ல்க‌ள் ப‌ற்‌றி என‌க்கு‌த் தெ‌ரியாது. ‌திபெ‌த் ‌சீனா‌வி‌ன் ஒருபகு‌திதா‌ன். ‌சீனா‌வி‌ன் உ‌ள்‌விவகார‌ங்க‌ளி‌ல் ‌திபெ‌த் ‌சி‌க்கலு‌ம் ஒ‌‌ன்று. இ‌தி‌ல் எ‌ந்த‌த் தலைய‌ீ‌ட்டையு‌ம் நா‌ங்க‌ள் எ‌தி‌ர்‌ப்போ‌ம்" எ‌ன்று ‌சீன அயலுறவு அமை‌ச்சக‌ப் பே‌ச்சாள‌ர் ‌கி‌ன் கா‌ங் கூ‌றினா‌ர்.

த‌ங்க‌ள் உ‌ள்‌‌விவகார‌ங்க‌‌ள் அனை‌த்தையு‌ம் எ‌தி‌ர்கொ‌ள்வ‌தி‌ல் சீன அர‌‌சு‌ம், ம‌க்களு‌ம் முழுமையான ‌திறனை உடையவ‌ர்க‌ள் எ‌ன்றா‌ர் ‌கி‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்