தென் ஆப்பிரிக்கா: கிடுகிடு பள்ளத்தில் பேருந்து விழுந்து 24 பேர் பலி!
புதன், 28 மே 2008 (12:27 IST)
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் பகுதியில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து 1000 அடி பள்ளத்தில் உருண்டு தலைகுப்புற ஆற்றில் விழுந்தது இதில் 24 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
தனியாருக்குச் சொந்தமான இந்த பேருந்து குறைந்தது 80 பயணிகளை ஏற்றிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. விபத்தில் காயமடைந்த 25 பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை, ராணுவ ஹெலிகாப்டர்கள் சடலங்களையும் காயமடைந்தோரையும் மேலே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளன.