நேபாளில் பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டம்!

சனி, 24 மே 2008 (20:01 IST)
வார்த்தைகள் அல்லது செய்கைகள் ரீதியாக பாலியல் து‌ன்புறு‌த்த‌ல், கொடுமைகளில் ஈடுபடுவதற்கு எதிரான புதிய சட்டம் நேபாளில் விரைவில் இயற்றப்படவுள்ளது.

நேபாள அர‌சி‌ன் மகளிர், குழந்தைகள் மற்றும் சமூக நல அமைச்சகம் இந்த‌ச் ச‌ட்ட வரைவை அடுத்த வாரம் கூடும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்‌கிறது.

இந்த சட்டத்தின்படி பணியிடங்களில் சொற்கள், எழுத்து மற்றும் செய்கைகள் ரீதியாக பாலியல் து‌ன்புறு‌த்த‌ல்களில் ஈடுபடுவது குற்றமாகும்.

பாலியல் கொடுமை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது குற்றத்தின் தன்மையை பொறுத்து ரூ.5,000 முதல் ரூ.25,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட நபர் 90 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் புகார் பதிவு செய்யவேண்டும் என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்