சீன பூகம்ப பலி 80,000-த்தை கடக்கும்!

சனி, 24 மே 2008 (20:02 IST)
சீனா‌வி‌ல் அ‌ண்மை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பய‌ங்கர பூக‌ம்ப‌த்‌தி‌ற்கு‌ப் ப‌லியானோ‌ர் எ‌‌ண்‌ணி‌க்கை 80,000 ‌த்தை‌க் கட‌க்கு‌ம் எ‌ன்று அ‌ஞ்ச‌ப்படு‌கிறது.

சீனா‌வி‌ல் சிச்சுவான் மாகாண‌த்‌தி‌ல் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 60,000த்தை எட்டிவிட்ட நிலையில் பலி எண்ணிக்கை 80,000 த்தை கடக்கும் என்று பிரதமர் வென் ஜியாபோ அச்சம் வெளியிட்டுள்ளார்.

மே 12 -ஆம் தேதி ஏற்பட்ட இந்த நில நடுக்க‌த்‌தி‌ன் மையத்திற்கு அருகில் உள்ள இங்க்ஸியூ என்ற ஊருக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனுடன் வந்த ஜியாபோ இதனை தெரிவித்தார்.

சீன பூகம்பப் பகுதிகளில் பாதிப்புகளையும் நிவாரணப் பணிகளையும் பார்வையிட ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்