பா‌கி‌ஸ்தா‌ன் அரசு-முஷாரஃப் மோதல் வலுக்கிறது!

வெள்ளி, 23 மே 2008 (16:46 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அமை‌ந்து‌ள்ள பு‌திய அர‌சி‌ற்கு‌‌ம் அ‌ந்நா‌ட்டு அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப்‌பி‌ற்கு‌ம் இடை‌யிலான மோத‌ல் வலுவடை‌ந்து‌ள்ளதாக அ‌ங்‌கிரு‌ந்து வரு‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆ‌ஷிப் அ‌லி சர்தாரி இந்திய பத்திரிகையாளர் ஒருவரிடம் அதிபர் முஷாரஃப் ஒரு பழங்காலச் சின்னம் என்றும் மக்களுக்கும் மக்களாட்சிக்கும் குறுக்கே நிற்கிறார் என்றும் கூறியது முஷாரஃப் மற்றும் ஆளும் கூட்டணி அரசிற்கும் மோதல்களை உருவாக்கியுள்ளது.

புதிய கூட்டணி அரசு அதிபர் முஷாரஃப்பின் அதிகார எல்லைகளை குறுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதால் அதிபர் முஷாரஃப் பெரிதும் அதிருப்தி அடைந்திருப்பதாக பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

நாட்டில் உள்ள நிலையற்ற அரசியல் விவகாரங்களால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவதாகவும், பொருளாதார அளவில் நாடு மேலும் சீரழிந்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து வருவதாகவும் முஷாரஃப் கவலை வெளியிட்டுள்ளார் என்றும் இது குறித்து பிரதமர் கிலானியுடன் பேசவிருப்பதாகவும் தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

மேலும் பாகிஸ்தானில் 9 பல்கலைக்கழங்களை ஏற்படுத்த மேலை நாடுகள் முடிவு செய்திருந்ததாகவும் தற்போதைய நிலையற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த நாடுகள் தயக்கம் காட்டுகின்றன என்றும் அதிபர் மாளிகை செய்தி‌த் தொடர்பாளர் கூறியதாக தெரிகிறது.

இதனால் அங்கு கூட்டணி அரசிற்கும் அதிபர் முஷாரஃ‌ப்பிற்கும் மோதல் வலுக்கிறது என்று பாகிஸ்தான் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்