மியான்மாருக்கு ஐரோப்பிய கமிஷன் புயல் நிவாரண நிதி!

செவ்வாய், 6 மே 2008 (11:50 IST)
சுமார் 10,000 பேர்களுக்கும் மேல் உயிரிழந்ததாக அஞ்சப்படும் மியான்மாரை தாக்கிய நர்கீஸ் புயலில் பாதிக்கப்பட்டோருக்கு ஐரோப்பிய கமிஷன் 2 மில்லியன் யூரோக்கள் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

மியான்மாரில் புயலால் பாதிக்கப்பட்டு உணவிற்கும் இருப்பிடத்திற்கும் போராடி வரும் மக்களைக் காப்பாற்ற ஐரோப்பிய கமிஷனின் மனித நேய உதவித் துறை இந்த தொகையை திரட்டியுள்ளது.

"ஒவ்வொரு மணி நேரமும் மியான்மாரிலிருந்து வரும் புயல் அழிவு செய்திகள் அங்கு உள்ள நிலைமைகளை தெரிவிக்கிறது. இது பயங்கர அழிவாகும். இதற்கு துரித கதியில் நிவாரணம் தேவைப்படுகிறது" என்று ஐரோப்பிய கமிஷனினின் லூயிஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

இந்த இயற்கைப் பேரழிவிலிருந்து பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்க உலக நாடுகளிடம் உதவி கோரியிருந்தார் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் நியான் வின்.

வெப்துனியாவைப் படிக்கவும்