பாகிஸ்தான் சிறையில் உள்ள மரண தண்டனைக் கைதியான இந்தியர் சரப்ஜித் சிங்கிற்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃப் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் தற்போது பதவியேற்றுள்ள கூட்டணி ஆட்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இவரது கட்சி, சரப்ஜித் சிங்கிற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரப்ஜித் சிங்கிற்கு எதிராக புதிய சாட்சியம் கிடைத்தால் அவரை திரும்பவும் பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவரை விடுவிக்கலாம் என்று நவாஸ் ஷரிஃப் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் இங்கு வந்து படும் அவதியை பார்த்தால் எந்த ஒரு நபரும் அந்த வலியை உணர்வார்கள் என்று கூறியுள்ள அவர் மனித நேயவாத அடிப்படையில் சர்ப்ஜித் சிங்கை தூக்கிலிட வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.