சீன ரயில் விபத்தில் 43 பேர் பலி!

திங்கள், 28 ஏப்ரல் 2008 (10:29 IST)
பீஜிங்: கிழக்கு சீனாவில் இன்று அதிகாலை இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறைந்தது 43 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பீஜிங்கிலிருந்து கிங்காடோ நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் ஷடாங் மாகாணத்தில் உள்ள ஸிபோ நகரில் தடம் புரண்டு மற்றொரு ரயில் மீது மோதியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். அந்த மற்றொரு ரயில் யான்டாயிலிருந்து சூஸூ நோக்கி வந்து கொண்டிருந்தது.

சீன ரயில்வே அமைச்சகத்தின் தலைமை பொறுப்பில் உள்ள லியூ ஸிஜுன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார் என்று அந்த நாட்டு இணையதளச் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்