ஈரான் தனது அணுத் திட்டங்களை தொடர்ந்து மறைத்து வருவதால் அந்நாட்டின் மீது மேலும் சில புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கவேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள கார்டன் பிரெளன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
அடுத்த சில வாரங்களில் திரவ எரிவாயு முதலீடு உட்பட ஈரான் மீது பல்வேறு புதிய தடைகளை ஏற்படுத்த விவாதித்து வருவதாக அவர் கூறினார்.
அணு ஆயுதப் பெருக்க தடை ஒப்பந்தத்தை இரான் மீறியதாக குற்றம்சாட்டிய பிரவுன் சர்வதேச நாடுகளுக்கு தனது அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து ஈரான் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றார்.