பெனாசிர் கொலை ஐ.நா.விசாரணை நடத்தவேண்டும்-தீர்மானம்!

புதன், 16 ஏப்ரல் 2008 (12:26 IST)
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன் தற்கொலைத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஐ.நா. சபை விசாரணை நடத்த புதிய அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

முன்னதாக முஷாரப் கோரிக்கையின் பேரில் இங்கிலாந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, தற்கொலை தாக்குதல் மூலம் தான் பெனாசிர் கொல்லப்பட்டார் என்றும், துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியாகவில்லை என்றும்அறிக்கை தாக்கல் செய்தனர்.

பெனாசிர் கொலை பற்றி ஐ.நா.விசாரணை நடத்தவேண்டும் என்று சர்தாரி கோரினார். இதை அதிபர் முஷரப் ஏற்றுக் கொள்ளவில்லை. ஐ.நா.சபையோ சம்பந்தப்பட்ட அரசாங்கம் கேட்டுக்கொண்டால் மட்டுமே இதுபற்றி யோசிக்க முடியும் என்று கூறி விட்டது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம்லீக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது.

புதிய அரசு பதவி ஏற்றதும், இது தொடர்பாக ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது.

ஐ.நா.சபை சர்வதேச விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த தீர்மானத்தை சட்ட அமைச்சர் ஃபரூக் நயீக் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்