‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌த் தடை: ஆ‌ஸ்‌ட்ரே‌லியா ப‌ரி‌சீலனை!

சனி, 12 ஏப்ரல் 2008 (11:51 IST)
த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌த் தடை ‌வி‌தி‌ப்பது கு‌றி‌த்து ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அரசு ‌தீ‌விரமாக‌ப் ப‌ரி‌சீலனை செ‌ய்து வருவதாக ‌சி‌றில‌ங்கா அயலுறவு அமை‌ச்சக‌ச் செயல‌ர் பா‌லித கோக‌ன்ன தெ‌ரிவ‌ி‌த்தா‌ர்.

கட‌‌ந்த வார‌ம் ஆ‌‌ஸ்‌ட்ரே‌லிய அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌ஸ்டீப‌ன் ‌ஸ்‌மி‌த்தை ப‌ர்‌த் நக‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சிய ‌சி‌றில‌ங்க அயலுறவு அமை‌ச்சக‌‌ச் செயல‌ர் பா‌லித கோக‌ன்ன, ‌த‌‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌‌க்க‌த்‌தி‌ற்கு ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் த‌டை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து‌ச் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய பா‌லித கோக‌ன்ன, தனது கோ‌ரி‌க்கையை‌த் ‌தீ‌விரமாக‌ப் ப‌ரி‌சீ‌லி‌ப்பதாக ஆ‌‌‌ஸ்‌ட்ரே‌லியா கூ‌றியதாக‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் ‌நி‌தி ‌திர‌ட்ட‌ப்படுவதை‌த் தடு‌ப்பத‌ற்கு அ‌ந்நா‌ட்டு அரசு மே‌ற்கொ‌ண்டு‌ள்ள நடவடி‌க்கைகளை‌த் தா‌ன் பாரா‌ட்டுவதாகவு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்