நேபாள மாவோயிஸ்டுகள் 7 பேர் சுட்டுக் கொலை

புதன், 9 ஏப்ரல் 2008 (12:46 IST)
நேபாள இடதுசாரிக் கட்சித் தொண்டர்களுக்கும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே ஏ‌ற்ப‌ட்ட கலவர‌த்தை கலை‌க்க காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கு நேபாளில் உள்ள டேங் என்ற மாவட்டத்தில் நே‌‌ற்று கலவரம் மூண்டது.

சுர்கெட் மாவட்டத்தில் மூண்ட இ‌ந்த கலவரத்தில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ரிஷி பிரசாத் ஷர்மா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் 5 பேர் படு காயமடைந்தனர்.

இதனையடுத்து அந்த மாவட்டத்தின் இரண்டு கிராமங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

240 ஆண்டுகால ஹிந்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் அரசியல் சட்ட மாற்றங்களை கொண்டு வருவதற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்