ஒலிம்பிக் விழாவை புறக்கணிக்க புஷ்ஷிற்கு ஹிலாரி வலியுறுத்தல்!
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (12:34 IST)
அமெரிக்க அரசாங்கம் சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சனம் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய ஹிலாரி கிளின்டன் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழாவை அதிபர் ஜார்ஜ் புஷ் புறக்கணிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
திபெத் மற்றும் டார்ஃபர் பிரச்சனை தொடர்பாக சீனாவின் நிலையை மாற்றிக் கொள்ள வலியுறுத்தவேண்டும் என்று அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியுள்ளார்.
பாரிஸ், லண்டனுக்குப் பிறகு சான்பிர்ஃபிரான்சிஸ்கோவிற்கு ஒலிம்பிக் ஜோதி வரவிருப்பதால், அங்கு திபெத் ஆதரவாளர்கள் எதிர்ப்புப் பேரணியில் இறங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹிலாரி கிளின்டனின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.