சீனாவில் பட்டாசு ஆலை விபத்து: 22 பேர் உடல் கருகி பலி!
வியாழன், 27 மார்ச் 2008 (12:33 IST)
சீனாவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஜின்சாக் நகரில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திடீரென்று ஏற்பட்ட இந்த தீவிபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.