துபாயில் 3 வயது இந்திய பெண் குழந்தை கொலை!

புதன், 19 மார்ச் 2008 (12:48 IST)
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை துபாயின் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது.

ஹோர் அல் அன்ஸ் பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் ரத்தக்காயங்களுடன் கிடந்த சிறுமி நவுஷகாடீஜாவின் உடலை காவல்துறையினர் மீட்டனர். அருகில் கடுமையான காயங்களுடன் இருந்த அவளது 18 வயதசகோதரிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தையின் இறப்பிற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளபோது, கம்ப்யூட்டர் பொறியாளரான இவர்களது தந்தை வேலைக்கு சென்றிருந்ததாகவும், தாய் வீட்டில் இருந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்