மன்னாரில் உள்ள தள்ளாடி படைத்தளத்தைக் குறி வைத்து நேற்று இரவு 9.45 மணி முதல் விடுதலைப் புலிகள் கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுவதாக புதினம் இணைய தளச் செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையில், மன்னார் சவுத்பார் படைத்தளத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதல்கள் துவங்கியதாகவும், இன்று அதிகாலை 1:00 மணிவரை இத்தாக்குதல்கள் தொடர்ந்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை 1:30 மணியளவில் மன்னார் மருத்துவமனைக்கு 14 படையினர் படுகாயங்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர்கள் அனைவரும் இன்று காலை அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.