மேற்கு சுமத்ராவில் கடும் நிலநடுக்கம்!

திங்கள், 3 மார்ச் 2008 (15:12 IST)
மேற்கு சுமத்ராவில் இன்று காலை இந்திய நேரம் மணி 8.07ன் படி கடலுக்கு அடியில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் ஏதுமில்லை என்று இந்தோனேஷிய நில நடுக்க ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தோனேஷிய உள் நாட்டு நேரம் காலை 9.37 ம‌ணியள‌வி‌ல் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 பு‌ள்‌ளிகளாக பதிவாகியுள்ளது.

மேற்கு சுமத்ரா தீவுகளுக்கு 157 கி.மீ. தொலைவில் உள்ள பைனானுக்கு தென் மேற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் 34 கி.மீ ஆழத்தில் இந்த நில நடுக்கத்தின் மையம் இருந்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்