ந‌ம்மை நெரு‌ங்கு‌கிறது ச‌னி

ஞாயிறு, 24 பிப்ரவரி 2008 (13:30 IST)
பூமிக்கு மிக அருகில் சனி கிரகம் வருகிறது. இ‌ந்த அ‌ரிய ‌நிக‌ழ்வு நாளை நடைபெறு‌கிறது. அதிக பிரகாசத்துடன் காணப்படும் சனி கிரகத்தை வெறும் கண்களா‌ல் பார்க்கலாம்.

சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான சனி கிரகம் சூரியனில் இருந்து 88 கோடி மைல்களுக்கும் அப்பால் உள்ளது. ஒரு தடவை இது சூரியனை சுற்றி வர 29 ஆண்டுகள் ஆகும். சனி கிரகத்தின் விட்டம் 74 ஆயிரத்து 560 மைல்கள்.

இந்த சனி கிரகத்தின் ஒரு அபூர்வ நிகழ்ச்சியாக நாளை மாலை சூரிய அஸ்தனமத்துக்கு பிறகு 1 மணி நேரம் கழித்து பூமிக்கு மிக அருகில் வருகிறது. அதிக பிரகாசத்துடன் சனி கிரகம் அப்போது பிரகாசிக்கும். கிழக்கு பகுதியில் தெரியும் இந்த அபூர்வ நிகழ்ச்சியை வெறும் கண்களா‌ல் பார்க்கலாம். இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை அதிகபட்ச அளவில் இதை பா‌ர்‌க்க செய்ய முடியும்.

இதுபோன்ற அபூர்வ நிகழ்ச்சி இனி 2015-ம் ஆண்டில் தான் நிகழும்.

இந்த அபூர்வ நிகழ்ச்சியின் போது பூமியின் ஒரு பக்கத்தில் சூரியனும், எதிர் திசையில் சனி கிரகமும் காட்சி அளிக்கும். சூரியனின் ஒளியை அதிகமாக பெற்று சனி கிரகம் பிரகாசிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்