முஷாரஃ‌‌‌ப் பத‌வி ‌விலக வே‌ண்டு‌ம்: பா‌‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் கரு‌த்து!

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (11:05 IST)
பா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌பபத‌வி ‌வில‌கினா‌லம‌ட்டுமநா‌ட்டி‌னபாதுகா‌ப்‌பமே‌ம்படு‌மஎ‌ன்றஅ‌ந்நா‌‌ட்டம‌க்க‌ளி‌லபெரு‌ம்பாலானோ‌ரகரு‌த்து‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

ி.ி.ி. நிறுவன‌நட‌த்‌திஆய்வில், ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து கொண்டே பாகிஸ்தான் அதிபராக முஷாரஃப் தன்னை தேர்ந்தெடுத்துக் கொண்டது தவறு என 50 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப் ‌வில‌கினா‌‌‌ல்தான் நாட்டின் பாதுகாப்பும், ‌நிலை‌த்த‌ன்மையு‌‌மமேம்படும் என 64 சதவீதம் பேர் கூறினர்.

முஷாரஃப் அதிபர் பதவியில் இருந்து விலகினால் நாட்டின் பாதுகாப்பு மேலும் பலவீனமாகும் என்று 25 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தான் அதிபராக முஷாரஃப் பதவி ஏற்றுக் கொண்டது அது சட்டபடி சரியானது என 29 சதவீதம் பேர் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர் அதிபராக பொறுப்பேற்றது சட்டத்திற்கு புறம்பானது என 49 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

வரும் 18ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுமா என்பது குறித்தும் கேட்டத‌ற்கு, 44 சதவீதம் பேர், தேர்தல் பாரபட்சமின்றி நியாயமாக நடைபெறும் என்று தெரிவித்தனர். மீதமுள்ள 46 சதவீதம் பேர் தேர்தல் நிச்சயமாக நியாயமாக நடைபெறாது என்று கூறியுள்ளனர்.

தேர்தலுக்கு பின் அமைக்கப்படும் நாடாளுமன்றம், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை ‌நீதிபதி இப்திகார் செளத்ரியை மீண்டும் பதவியில் அமர்த்தும் என 63 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பெனா‌சிர் புட்டோ கொலை‌க்கு தாலிபான் இயக்கம் தான் காரணம் என 16 சதவீதம் பேரு‌ம், உளவுத்துறை மற்றும் சிலருக்கு புட்டோ கொலையில் தொடர்பு உண்டு என்று 39 சதவீதம் பேரும், வேறு கட்சியினர் தான் கொலைக்கு காரணம் என்று 24 சதவீதம் பேரு‌ம், புட்டோவை கொலை செய்தது யார் என சரியாக கூற முடியவில்லை என்று 21 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.

பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் உருது பிரிவு நடத்திய இந்த ஆய்வில் மொத்தம் 1,476 பாகிஸ்தானியர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்