ஈரானின் புதிய விண்வெளி மையம் திறப்பு!

திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:45 IST)
செயற்கைக்கோள்களை பரிசோதிக்கும் வகையில், ஈரான் சொந்தமாக தயாரித்துள்ள முதல் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அந்நாட்டு அதிபர் முகமது அகமதிநேஜாத் இன்று துவக்கி வைத்தார்.

செயற்கைக்கோள் ஏவுதளம், கட்டுப்பாட்டு நிலையமமற்றும் 'ஓமித்' (நம்பிக்கை) என்ற ஆராய்ச்சி செயற்கைக்கோள் ஆகியவற்றையும் இந்த மையம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ஈரான் சொந்தமாக தயாரித்த முதல் செயற்கைக்கோள் ஓமித். இது கோளப்பாதையின் கீழ் பகுதியில் நிலைநிறுத்தககூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஈரானியர் நாட்குறிப்பின்படி மார்ச் 20ம் தேதி ஏவப்படும்' என்று அந்நாட்டு செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2005 பிப்., மாதம் ஈரான் தனது முதல் விண்கலத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது. இதுதவிர, 1,300 முதல் 1,600 கிலோ மீட்டர் தூரம் வரை அணுகுண்டுகளை எடுத்து செல்லக்கூடிய சாகாப் 3 ஏவுகணையையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்