பாகிஸ்தான் தகவலில் திருப்தியில்லை: அமெரிக்கா

புதன், 23 ஜனவரி 2008 (19:38 IST)
'ஆதிவாசிகள் பகுதிகளில் தீவிரவாத படைகளின் செயல்பாடுகள் குறித்த பாகிஸ்தான் அரசின் தகவல்கள் திருப்தி அளிக்கவில்லை' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க தீவிரவாத ஒழிப்பு பிரிவுக்கான முதன்மை அதிகாரி டெல் டெய்லெய் கூறுகையில், "பர்வேஷ் முஷாரஃப்பின் பாகிஸ்தான் அரசு நேரடி ஒத்துழைப்பு கோரும்வரை தீவிரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்க முன்வராது" என்றார்.
"உளவுத்துறையிடம் இடைவெளி இருப்பதால், அப்பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதில் போதிய தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. அங்கு சண்டையிடிவது அல் காய்டாவா? தாலிபானா? அல்லது வெளிநாட்டு பயங்கரவாதிகளா? என்று தெரியவில்லை. நட்பு நாடுகளில், அதுவும் அதிக ஒத்துழைப்பு கொடுக்கும் நாடுகளில் திட்டங்களை செயல்படுத்துதில் மிகுந்த கவனம் தேவை. பாகிஸ்தான் விரும்பினால், அமெரிக்கா நிச்சயம் உதவி செய்யும்" என்று டெய்லெய் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்