ஆ‌ப்க‌னி‌ல் தலிபா‌ன்க‌ள் தா‌க்குத‌ல்: 8 காவல‌ர்க‌ள் ப‌லி!

ஞாயிறு, 13 ஜனவரி 2008 (17:19 IST)
ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் த‌லிபா‌ன்க‌ள் நட‌த்‌திய வெடிகு‌ண்டு‌த் தா‌க்குத‌ல்க‌ளி‌ல் 8 காவ‌ல‌ர்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

வட‌க்கு ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் பது‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம் த‌லிபா‌ன்க‌ளி‌ன் ‌மீது ராணுவ‌த்‌தின‌ர் தொட‌ர்‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். இத‌ற்கு‌த் த‌லிபா‌‌ன்களு‌ம் ப‌திலடி கொடு‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் இ‌ன்று கா‌ந்தஹா‌ர் மாகாண‌த்‌தி‌ல் உ‌ள்ள மேவா‌ண்‌ட் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் சோதனை‌ச் சாவடி‌யி‌ன் ‌மீது த‌லிபா‌ன்க‌‌ள் வெடிகு‌ண்டுகளை ‌வீ‌சி‌த் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர். இ‌தி‌ல், 8 காவ‌ல‌ர்க‌ள் கொ‌ல்ல‌‌ப்ப‌ட்டதுட‌ன், காவ‌ல் துறை‌யின‌ரி‌ன் 2 வாகன‌ங்களு‌ம் சேதமடை‌ந்தன.

மேலு‌ம் காவல‌ர்க‌ளி‌ன் ஆயுத‌ங்களையு‌ம் த‌லிபா‌ன்க‌ள் எடு‌த்து‌ச் செ‌ன்று‌வி‌ட்டதாக, அரு‌கி‌ல் உ‌ள்ள நெவ‌ன் மாவ‌ட்ட காவ‌ல் அ‌திகா‌ரி சாது‌ல்லா கா‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்