இருதர‌ப்பு உறவை மே‌ம்படு‌த்த ‌பிரா‌ன்‌ஸ் அயலுறவு‌ அமை‌ச்ச‌ர் இ‌ந்‌தியா வருகை.

வியாழன், 20 டிசம்பர் 2007 (15:58 IST)
நா‌‌ன்கு நா‌ள் பயணமாக இ‌‌ந்‌தியா வ‌ந்து‌ள்ளா‌ர். இ‌ந்த பயண‌த்‌தி‌ன் போது அவ‌ர் இ‌ந்‌திய அயலுறவு‌த் தறை அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜியுட‌ன் இருதர‌ப்பு உறவு, ம‌ண்டல, ச‌ர்வதேச ‌பிர‌ச்சனைக‌ளி‌ல் எ‌வ்வாறு செய‌ல்படுவது எ‌ன்பது கு‌றி‌த்து பே‌ச்சு நட‌த்த உ‌ள்ளா‌ர்.

அடு‌த்த மாத‌ம் இ‌ந்‌தியா‌வி‌ல் சு‌ற்று‌ப்பயண‌ம் மே‌ற்கொ‌ள்ள உ‌ள்ள ‌பிரா‌ன்‌ஸ் அ‌திப‌ர் ‌நி‌க்கோல‌‌ஸ் ச‌ர்கோ‌ஸி‌யி‌ன் வருகை‌த்‌தி‌ட்ட‌ம் தொட‌ர்பாகவு‌ம் பே‌ச்சு நட‌த்துவா‌ர் என எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது. அடு‌த்த ஆ‌ண்டு குடியரசு‌த் ‌தின‌க் கொ‌ண்டா‌ட்ட‌த்‌தி‌ன் ‌சிற‌ப்பு ‌விரு‌ந்‌தினராக ‌பிரா‌ன்‌ஸ் அ‌திப‌ர் ப‌ங்கே‌ற்க உ‌‌ள்ள ‌நிலை‌யி‌ல் ‌பிரா‌ன்‌ஸ் அயலுறவு‌த் துறை அமை‌ச்ச‌ர் பெ‌ர்னா‌ர்‌ட் கோ‌‌ச்சன‌ர் வருகை மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌ய்‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது. ‌

பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி ஆ‌கியோரையு‌ம் இ‌ந்த பயண‌த்‌தி‌ன் போது அவ‌ர் ச‌ந்‌தி‌த்து பேச உ‌ள்ளா‌ர். சுகாதார‌ப் ப‌ணிகளை செய‌ல்படு‌த்துவ‌தி‌‌ல் ச‌ர்வதேச ஓரு‌ங்‌கிணை‌ப்பு‌த் தொட‌ர்பாக அரசு சாரா தொ‌ண்டு அமை‌ப்பு‌க்களுட‌ன் பெ‌ர்னா‌ர்‌ட் கோ‌‌ச்சன‌ர் ‌விவாத‌ம் நட‌த்த உ‌ள்ளா‌ர். இ‌ந்த ‌விவாத‌த்‌தி‌ல் தொ‌ழிலாள‌ர் நல‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌‌ஸ்கா‌ர் பெ‌ர்னா‌ண்ட‌ஸ், அயலுறவு‌ இணை அமை‌ச்ச‌ர் ஆன‌ந்‌த் ச‌ர்மா ஆ‌‌கியோ‌ர் ப‌ங்கே‌ற்க உ‌ள்ளதாகவு‌ம் கூற‌ப்படு‌கிறது.

பெ‌ர்னா‌ர்‌ட் கோ‌‌ச்சன‌ருட‌ன் அவரது மனை‌வி ‌கி‌றி‌ஸ்டி‌னி, ‌பிரா‌ன்‌ஸ் அயலுறவு‌த் துறை அ‌திகா‌ரிக‌ள் குழுவு‌ம் வ‌ந்து‌ள்ளன‌ர். அவ‌ர் ஆ‌க்ராவு‌க்கு‌ம் செ‌ல்‌கிறா‌ர். கட‌ந்த 1998 ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் இ‌ந்‌தியாவு‌ம், ‌பிரா‌ன்சு‌ம் இராணுவ ‌ரீ‌தியான ஒ‌த்துழை‌ப்புட‌ன் இணை‌ந்து செய‌ல்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. இ‌ந்த உறவு மெ‌ன்மேலு‌ம் ‌வி‌ரிவடை‌ந்து அர‌சிய‌ல், பொருளாதார‌ம், பாதுகா‌ப்பு, உய‌ர் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த் தறைகளான ‌வி‌ண்வெ‌ளி, ஆ‌க்க‌ப்பூ‌ர்வ ப‌ணிகளு‌க்கு அணுக‌க்‌தியை‌ப் பய‌ன்படு‌த்துவது என இரு நாடுகளு‌க்‌கிடையேயான உறவு ‌வி‌ரிவடை‌ந்து வரு‌கிறது.







வெப்துனியாவைப் படிக்கவும்