பு‌னித ஹ‌ஜ் பயண‌ம் தொட‌ங்‌கியது: 30 ல‌ட்ச‌ம் மு‌ஸ்‌லி‌ம்க‌ள் ப‌ங்கே‌‌ற்பு!

Webdunia

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (11:45 IST)
இந்தியா உள்பட 150க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் முஸ்லிம்கள் மெக்காவிலிருந்து மினாவுக்கு புனித ஹஜ் பயணத்தை தொடங்கினர்.

இந்த ஆண்டு ஹஜ் பயணத்தில் ஈரான் அதிபர் மொகமது அகமதிநிஜாத்தும் பங்கேற்றுள்ளார். ஈரா‌னஅதிபர் ஒருவர் ஹஜ் பயணத்தில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

சன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் மிகுந்த சவுதி அரேபியாவுக்கும், ஷியா முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த ஈரானுக்கும் சுமுக உறவு இல்லை. இதனா‌ல், ஈரான் அதிபரின் ஹஜ் பயணத்தின் மூலம் இருநாட்டு உறவு மேம்படும் என்று அரசியல் நோக்கர்கள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

மினா பள்ளத்தாக்கில் பகல் முழுவதும் தொழுகை, தியானத்தில் ஈடுபடும் ஹஜ் யாத்ரீகர்கள் இரவில் கூடாரங்களில் தங்குவர். பின்னர் அங்கிருந்து அராபத் மலைக்கு புனிதப் பயணம் மேற்கொள்வார்கள்.

கடந்த 2006 ஹஜ் பயணத்தில் ஜம்ராத் பாலத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலினால் 364 பேர் பலியாயினர். இந்த ஆண்டு இதுபோன்ற துயர சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு மணி நேரத்தில் 200 முதல் ஆயிரம் யாத்ரீகர்கள் வரை மட்டுமே பாலத்தை கடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டநெரிசலால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க சவுதி அரேபிய அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
திங்கள்கிழமை தொடங்கிய ஐந்து நாள் ஹஜ் பயணம் வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் இறைவனின் தூதர் முகமது இந்த புனிதப் பயணத்தை மேற்கொண்டபோது, அராபத் மலையில் புனித குரானின் கடைசி வாசகங்களை முகமதுவுக்கு அருளினார் இறைவன்.

வெப்துனியாவைப் படிக்கவும்