அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதும், இடைக்கால அரசியல் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுக்கத் தவறியதற்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட மாட்டார்கள்" என்றார்.
அவசர நிலைப் பிரகடனத்தை ரத்து செய்வதற்கு முன்னதாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அதிபர் முஷாரஃப் எடுத்து வருகிறார்.
அணுஆயுதங்கள் இதுவரை ராணுவத் தளபதியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அவர் ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகி விட்டதால், அணுஆயுதங்களின் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டு வந்து இருக்கிறார். இதற்கான அவசரச்சட்டத்தை அவர் நேற்று அவர் பிறப்பித்தார்.
அணுஆயுதங்களை உருவாக்குவது அவற்றை பாதுகாப்பது ஆகிய பொறுப்புகள் தேசியப் பாதுகாப்பு ஆணையத்திடம் உள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக ராணுவத் தளபதிதான் இதுவரை இருந்தார். இப்போது அப்பதவியில் அதிபர் இருப்பார் என்று அந்தச் சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.