இலங்கை : புலிகள், ராணுவம் கடும் மோதல்!

புதன், 12 டிசம்பர் 2007 (14:35 IST)
சிறிலங்க ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 40 புலிகளும், 4 சிறிலங்க ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

வடமேற்கு மன்னாரில் குறைந்தது 20 விடுதலை புலிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், தெற்கு அடம்பனில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், 3 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர், 7 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தேசிய பாதுகாப்பு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.

மன்னாரில் தங்களுடைய பகுதியை நோக்கி சிறிலங்க ராணுவம் நடத்திய முன்நகர்வை முறியடித்ததாகவும், இதில் 20 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 75 பேர் காயமுற்றதாகவும் விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர். தங்கள் தரப்பில் 3 புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

வடக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த மற்றொரு சண்டையில் நான்கு விடுதலை புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு பகுதிகளில் ஊடுருவிய பாதுகாப்பு படையினர் விடுதலை புலிகளுக்கு கடும் சேதத்தை விளைவித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்