இன ஒடுக்கலா? பொய் என்கிறார் மலேசிய பிரதமர்!

ஞாயிறு, 2 டிசம்பர் 2007 (18:35 IST)
தங்களை இன ரீதியாக மலேசிய அரசு ஒடுக்கி வருகிறது என்கின்ற குற்றச்சாற்று தங்களது நாட்டை இன ரீதியாக பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டது என்று மலேசிய பிரதமர் அப்துல்லா பதாவி கூறியுள்ளார்.

மலேசிய அரசால் இந்திய வம்சாவழியினர் ஓரங்கங்கட்டப்படுவதாக ஹின்ட்ராஃப் கூறிடும் குற்றச்சாற்று பொய் என்று நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் என்ற நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ள அப்துல்லா பதாவி, இந்திய வம்சாவழியினரின் குற்றச்சாற்று தன்னை மிகவும் கோவப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

“மலேசிய இந்தியர்கள் ஓரங்கட்டப்படுவதாக நிரூபிக்கட்டும், நான் பதவி விலகுகிறேன” என்றும் பதாவி கூறியுள்ளார்.

மலேசியாவில் இன ஒடுக்கல் நடந்துவருவதாக ஐ.நா. சபையில் ஒரு அவசர தீர்மானத்தை இங்கிலாந்து கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே ஹின்ட்ராஃப் இப்படிப்பட்ட குற்றச்சாற்றை கூறுவதாகவும் பிரதமர் பதாவி குற்றம் சாற்றியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்