கிளிநொச்சியின் புறநகர்ப் பகுதியான ஜெயந்தி நகரில் நேற்று பிற்பகல் 12:25 முதல் 20 நிமிடங்கள் சிறிலங்கா விமானப் படை விமானங்கள் தொடர்ந்து 12 குண்டுகளை வீசி இத்தாக்குதலை நடத்தின என்றும், இதில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் மட்டக்களப்பு ஐயங்கேணியில் இன்று காலை 2 வியாபாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பகுதியைச் சேர்ந்த அவர்கள் வியாபாரத்திற்காக ஐயங்கேணிக்கு வந்திருந்தனர் என்றும் என்ன காரணத்திற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்று தெரியவில்லை என்றும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.