29‌ல் முஷாரஃ‌ப் ‌மீ‌ண்டு‌ம் பத‌வியே‌ற்பு

Webdunia

ஞாயிறு, 25 நவம்பர் 2007 (14:30 IST)
பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் முஷரப் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் அவரது வெற்றியை எதிர்த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் அவர் வெற்றி பெற்றதை முறைப்படி அறிவிக்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த‌ம் தடை விதித்து இருந்தது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் அவர் வெற்றி பெற்றது செல்லும். அதிபர் பதவி ஏற்க தடை இல்லை என்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது.

இதை அடுத்து முஷரப் வெற்றி பெற்றதை தேர்தல் ஆணைய‌ம் முறைப்படி அறிவித்தது.

முஷரப் வருகிற 29-ந் தேதி மீண்டும் அதிபராக பதவி ஏற்கிறார். இன்னும் 5 ஆண்டுகளுக்கு அவர் அதிபர் பதவியில் நீடிப்பார். முன்னதாக அவர் 28-ந் தேதி ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்கிறார்.

ஜனவரி 8-ந் தேதி பாகிஸ்தானில் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பங்கேற்பத‌ாக பெனாசிரின் மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், சவூதி அரேபியாவில் இருந்து இன்று மாலை நாடு திரும்புகிறார். இதையொட்டி லாகூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வது நாளையுடன் முடிவடைகிறது. நவாஸ் செரீப்பின் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பதை அறிவிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்