ஆ‌ஸி. தே‌ர்த‌ல்: எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது

ஞாயிறு, 25 நவம்பர் 2007 (14:26 IST)
ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் நடைபெ‌ற்ற தே‌ர்த‌‌லி‌ல் சொந்த தொகுதியிலேயே ‌பிரதம‌ர் தோல்வி அடைந்தா‌ர். 11 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்து‌க்கான பொது‌த் தே‌ர்த‌ல் நேற்று நடைபெற்றது. அங்குள்ள 150 தொகுதிக‌ளிலு‌ம் நட‌ந்த இ‌ந்த தேர்த‌லில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது.

வா‌க்கு‌ப் ப‌திவு நட‌ந்து முடி‌ந்தவுனேயே நேற்று மாலை‌யிலேயே வா‌க்குக‌ள் எண்ணப்பட்டன. இதில் ஆளும் கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டது. தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்த ஜான்ஹோவர்டு தனது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்தார்.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளும் எதிர்கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்து இருந்தன.

தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் கெவின் ரூத் பிரதமராக பதவி ஏற்கிறார். இந்த தோல்விக்கு முழு பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வதாக ஜான் ஹோவர்டு தெரிவித்துள்ளார். ஈராக்குக்கு ஆஸ்திரேலிய ராணுவம் அனுப்பப்பட்டதை ஆஸ்திரேலிய மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவு உறுதிப்படுத்தி இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்