நெக்ரபாண்டே தலைமையில் பாகிஸ்தானிற்கு அமெரிக்கக் குழு!
Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (13:29 IST)
பாகிஸ்தானில் நிலைமைகளைக் கண்காணிக்கவும ், விரைவில் அவசர நிலையைக் கைவிடுமாறு முஷாரஃப்பை வலியுறுத்தவும் அரசுக் குழுவை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க அயலுறவ ு அமைச்சகத்தின் துணைச் செயலர் ஜான் நெக்ரபாண்டே தலைமையிலான இக்குழுவினர், அநேகமாக வருகிற வெள்ளிக்கிழமை பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளனர். இரண்டாம் நிலை அதிகாரியான ஜான் நெக்ரபாண்டே தற்போது ஆஃப்ரிக்காவில் சுற்றுப் பயணம் மெற்கொண்டுள்ளார். இந்தத் தகவலை அமெரிக்க செய்தித் தொடர்பாளர் டாம் கேஸி வாஷிங்டன்னில் தெரிவித்தார். பாகிஸ்தானில் உள்ள எல்லா அரசியல் சக்திகளும் ஒருங்கிணைந்து முன்னேற்றத்திற்காகச் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றும் அவர் கூறினார். முன்னதா க, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டெ ா, முஷாரஃப் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுபற்றிக் கேட்டதற்க ு, பாகிஸ்தானில் நிறைய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டானா பெரினோ கூறியுள்ளார்.
செயலியில் பார்க்க x