அ‌திப‌ர் பத‌வி‌யி‌லிரு‌ந்து முஷாரஃ‌ப் ‌விலக வே‌ண்டு‌ம்: பெனா‌சி‌ர் புட்டோ!

செவ்வாய், 13 நவம்பர் 2007 (21:19 IST)
ம‌க்களை ராணுவ‌ம் ஆளு‌ம் கால‌ம் முடி‌ந்து‌வி‌ட்டதா‌ல் முஷாரஃ‌ப் தனது அ‌திப‌ர் பத‌வி‌யி‌லிரு‌ந்து ‌விலக வே‌ண்டு‌ம் எ‌ன்று பா‌‌கி‌ஸ்தா‌னி‌ன் மு‌‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் பெனா‌சி‌ர் பு‌ட்டோ கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

லாகூ‌ரி‌ல் ‌வீ‌ட்டு‌க் காவ‌லி‌ல் இரு‌‌க்கு‌ம் பெனா‌சி‌ர், ‌பி‌ரி‌ட்டனை‌ச் சே‌ர்‌ந்த செ‌ய்‌தி ‌நிறுவன‌ம் ஒ‌ன்‌‌றி‌ற்கு‌த் தொலைபே‌சி வ‌ழியாக அ‌ளி‌த்து‌ள்ள பே‌ட்டி‌‌யி‌ல், ''ச‌ர்வா‌திகார‌த்‌தி‌ன் கால‌ம் முடி‌ந்து ‌வி‌ட்டது. எனவே முஷாரஃ‌ப் தனது பத‌வியை ‌வி‌ட்டு ‌விலக வே‌ண்டு‌ம்'' எ‌ன்று கூ‌‌றியு‌‌ள்ளா‌ர்.

''நா‌ன் நட‌த்‌த முய‌ன்ற ஊ‌ர்வல‌ம் அர‌சிய‌ல் ஊ‌ர்வல‌ம் அ‌ல்ல, ச‌ர்வா‌திகா‌ரி‌க்கு எ‌‌திராக ம‌க்க‌ள் நட‌த்த‌விரு‌ந்த போரா‌ட்ட‌ம். அதை‌த் தடு‌த்து ‌‌நிறு‌த்துவத‌ற்கு யாரு‌க்கு‌ம் அ‌திகார‌மி‌ல்லை.

பெ‌ண்க‌ள், குழ‌ந்தைக‌ள், ‌ சிறுபா‌ன்மை‌யின‌ர், ம‌ற்ற க‌ட்‌சிகளை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் என எல்லா‌த் தர‌ப்‌பினரு‌ம் எனது போரா‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்துகொ‌ள்ள வே‌ண்டு‌ம்'' எ‌ன்று‌ம் பெனா‌சி‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்