'சூப்பர் நோவா' வெடிப்பிற்கு கடலில் ஆதாரம்!

Webdunia

திங்கள், 5 நவம்பர் 2007 (14:00 IST)
'சூப்பர் நோவா' எனும் நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறியதற்கான ஆதாரங்களை பெருங்கடல்களின் அடியிலிருந்து ஆய்வாளர்கள் திரட்டியுள்ளனர்.

வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் மின்னுவதைப் பார்த்து நாம் மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் அந்த நட்சத்திரங்கள் ஒரு நிலையை அடையும்போது வெடித்துச் சிதறி அழிவைச் சந்திக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த வெடிப்பு 'சூப்பர் நோவா' என்று அழைக்கப்படுகிறது. நாம் வாழும் பூமி கூட சூரியன் என்ற நட்சத்திரம் வெடித்துச் சிதறியபோது தெரித்து விழுந்த நிலத்துண்டு என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

அதேபோல அண்டத்தில் உள்ள வேறு நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறியதற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் தேடிவருகின்றனர்.

அந்த ஆதாரங்கள் பூமியில் கிடைக்குமா என்று பிரிட்டனில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் தேடியதற்கு வெற்றி கிடைத்துள்ளது.

பசுபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களில் மனிதன் தொடாத பகுதிகளில் கதிரியக்கம் கொண்ட அயர்ன்-60 என்ற துகள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

சுமார் 60 முதல் 300 ஒளி ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற 'சூப்பர் நோவா' வெடிப்பின்போது தெறித்து பூமியில் விழுந்த துகள்கள் அவை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மண்ணியலில் பூமியின் வயதைப் பல்வேறு பிரிவுகளாகக் குறிப்பிடுகின்றனர். சுமார் 5.332 மில்லியன் ஆண்டிலிருந்து 1.806 மில்லியன் ஆண்டுவரை பிளையோசின் யுகம் (Pliocene era) என்று அழைக்கப்படுகிறது.

இந்த யுகத்தில்தான் குறிப்பிட்ட 'சூப்பர் நோவா' வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதில் தெரித்த துகள்கள் நம்மைத் தாக்கவில்லை அல்லது அப்போது நாம் தோன்றவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நட்சத்திரத்தின் தெறிப்புகள் நிச்சயமாக பூமியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வெடிப்பினால் ஏற்பட்ட கதிரியக்கம் காற்றுமண்டலத்தை கடக்கும் போது தனது வலிமையை இழந்திருக்கக் கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பூமியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கும் 'சூப்பர் நோவா' வெடிப்புகளுக்கும் உள்ள தொடர்பை நிரூபிப்பதற்கு நேரடியான எந்த ஆதாரமும் விஞ்ஞானிகளிடம் இல்லை.



வெப்துனியாவைப் படிக்கவும்