‌‌சி‌றில‌ங்கா ‌விமான‌ங்க‌ள் தா‌க்குத‌ல்: பு‌லிக‌ள் தள‌ம் சேத‌ம்!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (13:56 IST)
இல‌ங்கை‌யி‌ல் மு‌ல்லை‌த் ‌தீவு‌ப் பகு‌தி‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா ‌விமான‌ப் படை விமானங்கள் இ‌ன்று நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ப‌யி‌ற்‌சி தள‌ம் கடுமையாக சேதமடை‌ந்து‌ள்ளது.

அனுராதபுர‌ம் ‌விமான‌‌ப் படை‌த் தள‌த்‌தி‌ன் ‌மீது அ‌ண்மை‌யி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌‌லி‌ல் சிறிலங்க விமானப் படைக்கு பெரு‌ம் இழ‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. அத‌ற்கு ப‌‌திலடி கொடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் ராணுவ‌ம் தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌கிறது.

விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் உ‌ள்ள மு‌ல்லை‌த் ‌தீவு‌ப் பகு‌தி‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா‌வி‌ன் போ‌ர் ‌விமான‌ங்க‌ள் இ‌ன்று அ‌திகாலை 6.30 ம‌ணி‌க்கு தா‌க்குத‌ல் நட‌த்‌தின.

இ‌தி‌ல், கொ‌க்கு‌த்தொடுவை, மு‌ல்லை‌த் ‌தீவு‌ப் பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ப‌யி‌ற்‌சி தள‌ங்க‌ள் கடுமையாக சேதமடை‌ந்தன எ‌ன்று‌ம், இதை ‌விமா‌னிக‌ள் உறு‌தி‌ப்படு‌த்‌தின‌ர் எ‌ன்று‌ம் பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் தர‌ப்‌பி‌ல் உடனடியாக எ‌ந்த‌த் தகவலு‌ம் தர‌ப்பட‌வி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்