கூகுள் எர்த்தை பயன்படுத்தும் பாலஸ்தீன தீவிரவாதிகள்

Webdunia

சனி, 27 அக்டோபர் 2007 (12:39 IST)
இஸ்ரேல் இலக்குகளை ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்த கூகுள் எர்த் என்ற உலக சாட்டிலைட் வரைபட இணையதளத்தை பாலஸ்தீன தீவிரவாதிகள் பயன்படுத்துவதாக பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

காஸாவில் உள்ள தீவிரவாதிகள் அங்கிருந்து இஸ்ரேலின் குறிப்பிட்ட இலக்குகள் மீது ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்த கூகுள் எர்த்தை பயன்படுத்துகின்றனர் என்று அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக 2006ஆம் ஆண்டு ஏமனில் உள்ள எண்ணெய்க் கிணறுகளை தாக்க கூகுள் எர்த் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அது தோல்வியில் முடிவடைந்ததாக தி டெலிகிராப் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது.

நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில் இராக் தீவிரவாதிகள் பாஸ்ரா நகரில் உள்ள பிரிட்டிஷ் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த கூகுள் எர்த் இணையதளத்தை பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாக கூகுள் எர்த் தற்போது அந்த படங்களை தங்கள் இணையதளத்திலிருந்து நீக்கி விட்டு போருக்கு முந்தையதான சில பட‌ங்களை மாற்றி வைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்