அக்.25ல் சோனியா சீனப்பயணம்

Webdunia

திங்கள், 22 அக்டோபர் 2007 (17:21 IST)
சீனாவில் வரும் 25ஆம் தேதி அந்நாட்டு அதிபர் ஹீ ஜின்டாவோ-வை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசுகின்றார்.

சீனாவின் அதிபராக இரண்டாவது முறையாக அதிபர் ஹீ ஜிண்டாவோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சீன மக்கள் ராணுவத்தின் முப்படைகளின் தலைவராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் அவர் வரும் 2012 வரை இருப்பார்.

இந்தியா - சீனா இடையே இருக்கும் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஜிண்டாவோவின் இரண்டாவது பதவிக் காலம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இவர் பல முறை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் சீனா செல்வார் என்றும், அவரது பயணம் இருதரப்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இதனிடையே வரும் 25ஆம் தேதி சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜிண்டாவாவை சந்தித்துப் பேசுகிறார். இரு நாடுகளுக்கு இடையேயானா பொதுவான பல முக்கிய விஷயங்கள் குறித்து அப்போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்