பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : 7 பேர் பலி!

Webdunia

சனி, 20 அக்டோபர் 2007 (15:19 IST)
பாகிஸ்தானின் எல்லை மாவட்டமான பலுஜிஸ்தானில் வேன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமுற்றனர்!

பலுஜிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தேராபக்டி நகரில் ஒரு உணவகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு தொலைவில் இருந்து இயக்கி வெடிக்கச் செய்யப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

ஒரு குழந்தை, இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். வேனில் வைக்கப்பட்டிருந்த அந்த குண்டு வேறு எவரையோ குறிவைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ நாடு திரும்பியபோது அவரை குறிவைத்து நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் 140 பேர் கொல்லப்பட்ட இரண்டே நாட்களில் அந்நாட்டின் மற்றொரு பகுதியில் இன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்