பாகிஸ்தானில் இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டதால் மீண்டும் முஷாரப் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.
பாகிஸ்தானில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய அதிபரும் ராணுவத் தலைமை தளபதியுமான முஷாரப் இதில் போட்டியிடுகிறார். மேலும் 6 எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனால் முஷாரப் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
அதிபர் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சட்டசபை உறுப்பினர்களும் ஓட்டுப் போடுவார்கள். நான்கு நாட்களுக்கு முன்பு 68 பாராளுமன்ற உறுப்பினர்களும், 78 மாகாண சட்டசபை உறுப்பினர்களும் அதிரடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். எனினும் முஷாரப்புக்கு ஆதரவான உறுப்பினர்கள் பெரும்பான்மையாக பதவி வகிப்பதால் அவர் அதிகப்படியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது உறுதி.