அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌‌ந்த‌ம் : பா‌கி‌ஸ்தா‌ன் கவலை!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (16:03 IST)
இ‌ந்‌தியா- அமெ‌ரி‌க்கா இடை‌யிலான அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம், த‌ற்போது‌ள்ள அணு ஆயுதம‌ற்ற ‌நிலை ம‌ற்று‌ம் அணு ஆயுத‌ப் பரவ‌ல் தடை‌க்கு ஆதரவான ஒரு‌மி‌த்த கரு‌த்‌தி‌ற்கு பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் கவலை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ஐ.நா பொது அவை‌யி‌ல் பே‌சிய பா‌கி‌ஸ்தா‌ன் அயலுறவு‌த் துறை‌ச் செயலாள‌ர் ‌‌ரியா‌ஸ் முகமது கா‌ன், இ‌ந்‌திய அமெ‌ரி‌க்க அணுச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் தெ‌ற்கா‌சிய ம‌ண்டல‌த்‌தி‌ல் ஒரு பு‌திய பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்றா‌ர்.

அணுசக்தி தொழில்நுட்வழங்கலநாடுகள் (என் எஸ் ஜி) பட்டியலிலஉறுப்பினராக வே‌ண்டு‌ம் எ‌ன்ற இந்தியாவினகோரிக்ககுறித்து‌ம் அவ‌ர் பேசினார்.

அ‌ப்போது, இ‌ந்‌தியா‌வி‌ன் கோ‌ரி‌க்கை‌க்கு குறிப்பிட்ட வகை‌யிலோ அல்லதஒருதலைப்பட்சமாகவோ என்எஸ்ஜி அ‌ளி‌க்கு‌ம் ஒப்புத‌ல், அணு ஆயுத‌ப் பரவ‌ல் தடை தொட‌ர்பாக தற்போதுள்ஒருமித்கருத்துகளுக்கபாதி‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்றா‌ர்.

சுமார் 45 நாடுகளஉறுப்பினர்களாகககொண்என்எஸ்ஜி-யிலசேர்க்குமாறஇந்தியகோரிக்கவிடுத்திருப்பதகுறிப்பிடத்தக்கது.

இ‌‌ந்‌தியா‌வி‌ன் அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அதேநேர‌த்‌தி‌ல், ச‌ர்வதேச‌க் க‌ண்கா‌ணி‌ப்பு ‌வி‌திகளு‌க்கு உ‌ட்ப‌ட்டு ‌‌அணுச‌க்‌தியை உருவா‌க்‌கி‌ப் பெரு‌க்குவ‌தி‌ல் பா‌கி‌‌ஸ்தா‌ன் ‌மிகவு‌ம் ஆ‌ர்வமாக உ‌ள்ளது எ‌ன்று‌ம் ‌ரியா‌‌ஸ் முகமது கா‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்