அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் நார்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சா சந்தித்துப் பேசியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ளச் சென்ற இருவரும், இலங்கை இனப்பிரச்சினை குறித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதித்தனர் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறிலங்கா அரசாங்கத்தின் கிழக்கு இராணுவ நடவடிக்கை குறித்தும் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் குறித்தும் இந்த சந்திப்பில் எரிக் சொல்ஹெய்முக்கு மகிந்த விளக்கிக் கூறியதாகவும், அமைதி நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆராய்ந்ததாகவும் சிறிலங்கா அரசு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.